Advertisment

'75வது சுதந்திர தின நினைவுத் தூண்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்! (படங்கள்)

இந்தியாவின் 75 ஆவது சுதந்திர தின விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனால் அரசு அலுவலகங்களில் கொடியேற்றும் நிகழ்வு நடைபெற்று வரும்நிலையில், சென்னை கோட்டை கொத்தளத்தில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தேசியக் கொடியை ஏற்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.திறந்தவெளி ஜீப்பில் கோட்டைக்கு வந்த முதல்வர் ஸ்டாலினுக்கு காவல்துறையினர் அணிவகுப்பு மரியாதை கொடுத்தனர். அதனை முதல்வர் ஸ்டாலின் ஏற்றுக்கொண்டார்.அதனையடுத்து சென்னை கோட்டை கொத்தளத்தில்தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார் முதல்வர் ஸ்டாலின்.

Advertisment

அதனைத் தொடர்ந்து சுதந்திர தின நிகழ்வில் உரையாற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின், ''கோட்டையில் கொடியேற்ற வாய்ப்பளித்த தமிழ்நாட்டு மக்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி. கல்லாலும் மண்ணாலும் உருவானதல்ல... சுதந்திரத்துக்காகப் போராடியவர்களின் ரத்தத்திலும் சதையிலும் எழுப்பப்பட்டது 75 வது சுதந்திர தின நினைவு தூண். வேலுநாச்சியார், கட்டபொம்மன், தில்லையாடி வள்ளியம்மை, பெரியார் போன்ற ஏராளமான தியாகிகளின் மூச்சுக்காற்றால் கட்டப்பட்டது நினைவுத்தூண்'' என உரையாற்றினார்.

Advertisment

75வது சுதந்திர தின நினைவுத் தூணை தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார். சென்னை நேப்பியர் பாலம் அருகே இந்த நினைவுத்தூண் திறந்து வைக்கப்பட்டுள்ளது. 42 அடி உயரம் கொண்ட துருப்பிடிக்காத உலோகத்தால் 1.95 கோடி ரூபாய் மதிப்பில் இந்த நினைத்தூண் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மொத்த உயரம் தரைமட்டத்திலிருந்து 50 அடி ஆகும். ராணுவத்தினரை போற்றும் விதமாக 4 ராணுவ வீரர்களின் சிலைகள் சுற்றி அமைக்கப்பட்டுள்ளது.

India Independent
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe