publive-image

Advertisment

இந்திய திருநாட்டின் 75வது சுதந்திர தினத்தையொட்டி, வரும் ஆகஸ்ட் 13- ஆம் தேதி முதல் மூன்று நாட்களுக்கு பொதுமக்கள் அனைவரும் தங்களது வீடுகளில் தேசிய கொடியை ஏற்றுமாறு தமிழக ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார்.

இது தொடர்பாக, காணொளியை வெளியிட்டுள்ள தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், தமிழ்நாடு விடுதலைப் போராட்ட வீரர்களின் தியாகங்களை நினைவு கூர்ந்துள்ளார். அவர்களுக்கு மதிப்பளிக்கும் வகையில் வீடுகளில் தேசிய கொடியை ஏற்றுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

Advertisment

இதுவே சரியான நேரம்; பாரதத்தின் பொன்னான நேரம். எண்ணற்ற கரங்களின் ஆற்றல் இங்கு உள்ளது. எங்கும் நாட்டுப்பற்று பரவியுள்ளது. நீங்கள் எழுந்து நின்று மூவர்ண கொடியை அசையுங்கள். பாரதத்தை ஒளிமயமாக்குங்கள் என்று தமிழில் பேசினார்.