75வது சுதந்திர தினம்; இரயில்வே பாதுகாப்பு படை சார்பில் விழிப்புணர்வு பேரணி! 

75th Independence Day; Awareness rally on behalf of Railway Protection Force!

இந்திய நாட்டின் 75வது சுதந்திரத்தை கொண்டாடும் வகையில் ரயில்வே பாதுகாப்பு படை சார்பில் பாதுகாப்பு படையினர் பங்கேற்ற இருசக்கர விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்தப் பேரணியை ரயில்வே கோட்ட மேலாளர் மனீஷ் அகர்வால் கொடியசைத்து துவக்கி வைத்தார். இப்பேரணியானது திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு நீதிமன்றம், தில்லை நகர், தலைமை அரசு மருத்துவமனை சாலை, கோகினூர் திரையரங்க சாலை, மெயின்காட்கேட், காந்தி மார்க்கெட், பாலக்கரை வழியாக மீண்டும் திருச்சி ரயில்வே ஜங்ஷன் வந்து அடைந்தது.

இதனைத் தொடர்ந்து சுதந்திர போராட்டத்தில் கலந்து கொண்ட தியாகிகளின் வீடுகளுக்கு சென்று அவர்களை சந்தித்து கௌரவிக்க உள்ளனர். மேலும், பத்தாயிரம் மரக்கன்றுகளையும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. சுதந்திர போராட்டத்தின் பங்கு குறித்து பிரசுரங்களையும் விநியோகிக்கப்பட உள்ளது. குறிப்பாக பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அதிக எண்ணிக்கையிலான ரயில்வே பெண் பாதுகாப்பு படையினர் இந்தப் பேரணியில் கலந்து கொண்டனர்.

trichy
இதையும் படியுங்கள்
Subscribe