
மருத்துவப் படிப்பில் 7.5 சதவீத உள் ஒதுக்கீடு செய்த தமிழக அரசிற்கு நடிகர் சூர்யா நன்றி தெரிவித்துள்ளார்.
"அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கிய தமிழக அரசுக்கு நன்றி. உள் ஒதுக்கீட்டை உறுதி செய்த அரசுக்கும், உறுதுணையாக இருந்த அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் நன்றி. மாணவர்களுக்குத் துணையாய்நின்றுஒன்றிணைந்து செயல்படுவோம்" என நடிகர் சூர்யா ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
அண்மையில் நீட் தேர்வு குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை தமிழகத்தில் விவாதப் பொருளாக எழுந்தது குறிப்பிடத்தக்கது.
Follow Us