நாடு முழுவதும் இன்று 74வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. டெல்லியில் நடைபெற்ற விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கொடியேற்றி வைத்தார். இந்நிலையில் தமிழ்நாடு மாநில ஆளுநர் ஆர்.என். ரவி தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். மேலும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு விருதுகளை வழங்கி சிறப்பித்தார். இந்நிகழ்ச்சியில் அரசு உயர் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.