Advertisment

6 வயது சிறுமியிடம் அத்துமீறிய 73 வயது முதியவர் கைது!

73-year-old man arrested under pocso act in salem

Advertisment

சேலத்தில், தனி அறைக்கு அழைத்துச்சென்று 6 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக 73 வயது முதியவரை போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்தனர்.

சேலம் நகரம், முகமதுபுறா தெருவைச் சேர்ந்தவர் விஸ்வநாதன் (73). இவர், திங்களன்று (15.11.2021) இரவு அதே பகுதியைச் சேர்ந்த 6 வயது சிறுமி ஒருவருக்கு, சாக்லெட்டுகள் வாங்கிக் கொடுத்து, தனியாக உள்ள ஒரு அறைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அந்த அறைக்குள் சென்றதும், விஸ்வநாதன் சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி, கத்திக் கூச்சல் போட்டுள்ளார். சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு, அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து முதியவரை சுற்றிவளைத்துப் பிடித்தனர்.

இதையடுத்து அவரை, சேலம் நகர அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அந்த முதியவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரி காவல் நிலையம் முன்பு சிறிது நேரம் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Advertisment

பாதிக்கப்பட்ட சிறுமியிடம் விசாரித்த காவல்துறையினர், விஸ்வநாதன் மீது போக்சோ சிறப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவுசெய்து, கைது செய்தனர். 6 வயதே ஆன சிறுமியிடம் 73 வயதான முதியவர் பாலியல் ரீதியாக அத்துமீறிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

POCSO Salem
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe