
நாட்டின் 72- வது குடியரசுத் தினத்தையொட்டி, சென்னை மெரினா கடற்கரை சாலையில் தேசியக்கொடியேற்றினார் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்.
தேசியக்கொடியேற்றி வைத்த தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பல்வேறு படைப்பிரிவுகளின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். நாட்டின் பல்வேறு துறைகளின் சாதனை விளக்க வாகன அணி வகுப்பும் மெரினா கடற்கரை சாலையில் நடந்தது. கரோனா அச்சுறுத்தலால் குடியரசுத் தின விழாவில் மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் ரத்துச் செய்யப்பட்டுள்ளன.

இந்த விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகள், காவல்துறை உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.
முன்னதாக, சென்னை ராஜாஜி சாலையில் உள்ள போர் நினைவு சின்னத்தில் தமிழக ஆளுநர் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.