Advertisment

71- வது குடியரசு தினம்: தேசிய கொடியேற்றினார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்!

இந்திய நாட்டின் 71- வது குடியரசு தினம் நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் படி பல்வேறு மாநிலங்களின் ஆளுநர்கள் அந்தந்த மாநில தலைநகரங்களில் தேசிய கொடியை ஏற்றி வைத்தனர்.

Advertisment

71th republic day india celebration Tamilnadu Governor Banwarilal Purohit at chennai

அதன் தொடர்ச்சியாக சென்னை மெரினா காந்தி சிலை அருகே ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தேசிய கொடியேற்றினார். இந்த விழாவில் தமிழக முதலமைச்சர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் செங்கோட்டையன், எஸ்.பி.வேலுமணி, சபாநாயகர் தனபால், துணை சபாநாயர்கள் பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். அதேபோல் தமிழக டிஜிபி திரிபாதி, தலைமை செயலாளர் சண்முகம், சென்னை மாநகர காவல்துறை ஆணையர் விஸ்வநாதன் உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் விழாவில் கலந்துக்கொண்டனர்.

71th republic day india celebration Tamilnadu Governor Banwarilal Purohit at chennai

Advertisment

தேசியக் கொடியேற்றி வைத்த ஆளுநர் முப்படை அணி வகுப்பு, காவல்துறை, என்சிசி என 48 படை பிரிவுகளின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றார்.அதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் குடியரசுத் தினம் களைகட்டியுள்ளது. மேலும் நாட்டின் உள்ள ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள், ஆளுநர் மாளிகைகள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளனர்.

governor banwarilal purohit Tamilnadu Celebration 71th republic day
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe