Advertisment

புதுக்கோட்டை ஜல்லிக்கட்டில் 700 காளைகள் பங்கேற்பு! அமைச்சர்கள் கொடி அசைத்து துவக்கி வைப்பு! 

700 bulls participate in Pudukkottai Jallikkat

Advertisment

தமிழகத்தில் அதிகமான ஜல்லிக்கட்டு நடக்கும் புதுக்கோட்டை மாவட்டத்தில் தான் தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டு விளையாட்டு கந்தர்வகோட்டை தச்சன்குறிச்சியில் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து அவனியாபுரம், பாலமேடு, ஜல்லிக்கட்டுகளும் நடந்தது.

இந்த நிலையில், நேற்று நடக்க இருந்த ஜல்லிக்கட்டு விளையாட்டு முழு ஊரடங்கு காரணமாக இன்று காலை 7 மணிக்கு தொடங்கியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், வன்னியன்விடுதி ஜல்லிக்கட்டில் சுமார் 700 காளைகளுக்கு டோக்கன் கொடுக்கப்பட்டிருந்த நிலையில், இன்று காலை 7.30 மணிக்கு அமைச்சர்கள் ரகுபதி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சிவ.வீ.மெய்யநாதன் உள்ளிட்ட அமைச்சர்கள் கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைத்தனர். ஜல்லிக்கட்டு விளையாட்டு போட்டிகளில் சட்ட ஒழுங்கு பிரச்சனைகளைத்தடுக்க ஆலங்குடி, ஆலங்காடு உள்பட சுற்றியுள்ள ஊர்களில் 8 டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டுள்ளது. சிறந்த காளைகளுக்கும், காளையர்களுக்கும் சிறப்பு பரிசுகளும் அறிவிக்கப்பட்டுள்ளது.

puthukottai Jallikkattu
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe