70-year-old woman incident; Youth arrested

மதுரையில் 70 வயது மூதாட்டி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisment

மதுரை மாவட்டம் ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் உள்ள ஜீவா அம்பேத்கர் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜா என்பவரின் மனைவி சுப்புலட்சுமி (70) மூதாட்டியான இவரது கணவர் ராஜா இறந்த நிலையில் தனியாக வசித்து வந்தார். இன்று காலை நீண்ட நேரமாக மூதாட்டியின் வீடு பூட்டப்பட்டு இருந்தது. இதனால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் கதவைத்திறந்து பார்த்த பொழுது வீட்டுக்குள் மூதாட்டி கல்லால் தலையில் தாக்கப்பட்ட நிலையில் உயிரிழந்து கிடந்தார். உடனடியாக ஜெய்ஹிந்த்புரம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மூதாட்டி உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு உடலை அனுப்பி வைத்தனர்.

மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது. மேலும் அந்த பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளையும் கைப்பற்றி போலீசார் விசாரணை செய்தனர். விசாரணையில் அதே பகுதியைச் சேர்ந்த அர்ஜுனன் என்ற இளைஞர் மூதாட்டியைக் கொலை செய்தது தெரிய வந்தது. மூதாட்டி பென்ஷன் வாங்கி வரும் நிலையில் அந்த பணத்தை திருடுவதற்காக இந்த கொலை நிகழ்ந்திருக்கலாம் எனஅக்கம்பக்கத்தினர் தெரிவித்தனர். ஆனால் போலீசார் விசாரணையில் அதிர்ச்சி தரும் விதமாக, மூதாட்டி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரிழந்தது தெரியவந்தது. 70 வயது மூதாட்டி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரிழந்த சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisment