7 years jail sentence for AMMK personality

திண்டுக்கல் மாவட்டம் முத்தனம்பட்டியில் தனியார் நர்சிங் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியின் தாளாளராக அமமுக பிரமுகர் ஜோதி முருகன் பதவி வகித்து வருகிறார். இவர்கல்லூரியில் படித்து வரும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறி மாணவிகள் கடந்த 2021 ஆம் ஆண்டுஉள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisment

இதனையடுத்து கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பர் 19 ஆம் தேதி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் இது தொடர்பான வழக்கில் ஜோதி முருகன், கல்லூரியின் விடுதி காப்பாளர் அர்ச்சனா ஆகியோர் கைது செய்யப்பட்டிருந்தனர். இந்த வழக்கு தொடரபான விசாரணை திண்டுக்கல் மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை நீதிபதி கருணாநிதி நடத்தினார்.

Advertisment

இந்நிலையில் இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், கல்லூரி தாளாளர் ஜோதி முருகனுக்கு 7 ஆண்டு சிறை மற்றும் ரூ.75 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு உடந்தையாக இருந்த விடுதி காப்பாளர் அர்ச்சனாவுக்கு 5 ஆண்டு சிறை மற்றும் ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து திண்டுக்கல் போக்சோ நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை அளித்துள்ளது. சிறை தண்டனை பெற்ற ஜோதி முருகன் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அமமுக சார்பில் போட்டியிட்டுட்டு தோல்வியடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.