7-year-old boy hacked after breaking into house; shocking incident in Madurai

மதுரையில் மதுபோதையில் இளைஞர் ஒருவர் வீடு புகுந்து 7 வயது சிறுவனை சரமாரியாக வெட்டி படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisment

மதுரை மாவட்டம் திருவேடகம் பகுதி சேர்ந்தவர் முத்துசாமி. அவருடைய மனைவி தவமணி மற்றும் பேரன் மீதுன் ஆகியோருடன் முத்துசாமிவீட்டில் இருந்தார். அப்போது அதேபகுதியில் வசித்து வரும் அய்யனார் என்ற நபர் மதுபோதையில் முத்துசாமியின் வீட்டிற்குள் வந்துள்ளார். திடீரென கத்தியை எடுத்த அய்யனார் தாத்தா, பாட்டி, பேரன் என மூன்று பேரையும் கத்தியால் குத்தியுள்ளார். இதில் படுகாயங்களுடன் மூன்று பேரும் மீட்கப்பட்டனர். இதில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சிறுவன் மிதுன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதுதொடர்பாக சோழவந்தான் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

Advertisment