Advertisment

சாலை விபத்தில் 7 பெண்கள் பலி; முதல்வர் நிதியுதவி அறிவிப்பு

7 women incident in road accident Announcement of Chief Minister's Funding

ஆம்பூர் ஓணாங்குட்டை பகுதியைச் சேர்ந்த கிராமத்தினர் சிலர் திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அருகே சுற்றுலா சென்றுவிட்டு இன்று விடியற்காலை ஊர் திரும்பிக்கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் வந்த வேன் பழுதாகியது. இதனால் வேனில் பயணித்தவர்கள் அதிலிருந்து இறங்கி சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சென்டர் மீடியன் தடுப்பில் அமர்ந்திருந்தனர். அப்பொழுது வேனின் பின்பக்கத்தில் லாரி ஒன்று வந்து மோதியது. மோதிய வேகத்தில் வேன் கவிழ்ந்துள்ளது. இதில் சாலையின் சென்டர் மீடியன் தடுப்பு மீது அமர்ந்திருந்த பெண்கள் மீது வேன் கவிழ்ந்தது.

Advertisment

இன்று அதிகாலை நடந்த இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே ஒரே கிராமத்தைச் சேர்ந்த 7 பெண்கள் உயிரிழந்தனர். 10க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். அதில் 4 பேர் கவலைக்கிடமாக உள்ளனர். இவர்களை திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கும், கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கும் அனுப்பிவைத்துள்ளனர்.

Advertisment

இந்நிலையில் இந்த விபத்து சம்பவம் குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டை அடுத்த ஓணான்குட்டை கிராமத்தைச் சேர்ந்த 24 நபர்கள் கடந்த 8 ஆம் தேதியன்று தனியார் சுற்றுலா மினி பேருந்து மூலம் பெங்களூருக்கு சுற்றுலா சென்றுவிட்டு இன்று (11.09.2023) சொந்த ஊர் திரும்பி வரும் பொழுது திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சண்டியூர் என்ற இடத்தில் வாகன பழுது காரணத்தினால், தேசிய நெடுஞ்சாலை சென்டர் மீடியன் ஓரத்தில் நிறுத்தி சரி செய்து கொண்டுருந்தனர். அப்போது இதில் பயணித்த பயணிகள் நிறுத்தப்பட்ட வாகனத்தின் முன் அமர்ந்திருந்தனர்.

7 women incident in road accident Announcement of Chief Minister's Funding

அப்போது பின்னால் வந்த லாரி முன் மினி பேருந்தின் மீது எதிர்பாராதவிதமாக மோதி ஏற்பட்ட விபத்தில் பழுதடைந்த வாகனத்தின் முன்னால் அமர்ந்திருந்த பழனி மனைவி செல்வி என்கிற சேட்டம்மாள் (வயது 55), முனுசாமி மனைவி மீரா (வயது 51), சண்முகம் மனைவி தேவகி (வயது 50), குப்புசாமி மனைவி கலாவதி (வயது 50), குப்பன் மனைவி சாவித்ரி (வயது 42), ரஞ்சித் மனைவி கீதாஞ்சலி (வயது 35) மற்றும் திலிப்குமார் மனைவி தெய்வானை (வயது 32) ஆகிய ஏழு பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு அவர்களது குடும்பத்தினருக்கு தலா ஒரு இலட்சரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட உத்தரவிட்டுள்ளேன். மேலும் இவ்விபத்தில் காயமடைந்து கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு நிவாரணத் தொகையாக தலா ஐம்பதாயிரம் ரூபாய் வழங்கிடவும் அவர்களுக்குச் சிறப்பான சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன்” என தெரிவித்துள்ளார்.

TIRUPATTUR
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe