பர

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்துவரும் காரணத்தால் தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் கனமழை பெய்தது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட வட மாவட்டங்களில் அதி தீவிர கனமழை பெய்த காரணத்தால் இயல்பு வாழ்க்கை முடங்கிப் போயுள்ளது. கனமழை காரணமாக சென்னையில் பெரும்பாலான சாலைகளில் மழை நீர் தேங்கியுள்ளது. இந்த மழையின் காரணமாக சென்னையில்,நேற்று (11.11.2021) 10க்கும் மேற்பட்ட சுரங்கப்பாதைகள் நீரில் மூழ்கியிருந்ததால் வாகனப் போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டிருந்தது. தற்போது மழை நீர் சில சுரங்கப்பாதைகளில் வடிந்துள்ளதால் போக்குவரத்து தொடங்கியுள்ளது. இந்நிலையில், வியாசர்பாடி, கணேஷபுரம், மேட்லி, துரைசாமி, அஜாக்ஸ், அரங்கநாதன், காக்கன் ஆகிய பகுதிகளில் உள்ள சுரங்கப்பாதைகள் தொடர்ந்து மூடப்பட்டுள்ளன. மாநகராட்சி ஊழியர்கள் தண்ணீரை அகற்றும் முயற்சியில் ஈடுபட்டுவருகின்றனர்.

Advertisment

கத