Advertisment

தூத்துக்குடியில் 7 டன் செம்மரக்கட்டைகள் பறிமுதல்!

 7 tonnes of timber seized in Thoothukudi

தூத்துக்குடியில் சுமார் 12 கோடி ரூபாய் மதிப்புள்ள செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Advertisment

தூத்துக்குடியிலிருந்து மலேசியா போர்ட்லாண்ட் துறைமுகத்திற்கு சுமார் 12 கோடி ரூபாய் மதிப்புடைய செம்மரக்கட்டைகள் கடத்திக் கொண்டு வரப்படுவதாக பெங்களூரைச் சேர்ந்த வருவாய் புலனாய்வு அதிகாரிகளுக்கு இரகசிய தகவல்கள் கிடைத்ததை அடுத்து அதிகாரிகள் அங்கு சோதனையில் ஈடுபட்டனர். அப்பொழுது தூத்துக்குடி துறைமுகம் வாயிலாக செம்மரக்கட்டைகளை ஏற்றிக்கொண்டு வந்த லாரி சிப்காட் வளாகத்தில் செல்லும் போது மடக்கி பிடித்தனர். சோதனையில் இரும்பு பைப்புக்கு அடியில் மறைத்து வைத்து 7 டன் செம்மரக்கட்டைகள் கொண்டு வரப்பட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக திருப்பூரைச் சேர்ந்த மோகன் குமார் மற்றும் லாரி ஓட்டுநர் உள்ளிட்ட இருவரைத் தேடி வருகின்றனர்.

Advertisment

Thoothukudi tree
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe