7 Thousands of chickens prey on fire

Advertisment

வேலூர் மாவட்டம், கே.வி.குப்பம் தொகுதியில் உள்ளது மச்சனூர் கிராமம். இந்த கிராமத்தின் குடியிருப்பு பகுதியில் இருந்து கொஞ்சம் தொலைவில் அதே கிராமத்தை சேர்ந்த சிதம்பரம் என்பவருக்கு சொந்தமாக கோழிப்பண்ணை உள்ளது. இந்த கோழிப்பண்ணையில் உற்பத்தி செய்யப்படும் கோழிகள் பிரபல சிக்கன் நிறுவனத்துக்கு சப்ளை செய்யப்படுகிறது.

இந்த கோழிப்பண்ணையில் ஜீன் 6ந் தேதி காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.கோழிப்பண்ணை தென்னங்கீற்றால் அமையப்பெற்றது. அதனால் ஒருயிடத்தில் தீ பற்றியதும் மிக வேகமாக முழு பண்ணைக்கும் பரவியது. இந்த தீ விபத்தில் பண்ணையில் இருந்த 7 ஆயிரம் கோழிகள் தீக்கு இரையாகியுள்ளன.

தீ பற்றியதும் அங்கு வேலை செய்யும் ஒருவர் இதுப்பற்றி உடனடியாக தீ அணைப்பு நிலையத்துக்கு தகவல் தந்துள்ளார். கே.வி.குப்பத்தில் இருந்து தீ அணைப்பு வாகனம் வருவதற்குள் முழுவதும் சரிந்து சாம்பலாகியுள்ளது. இதனால் 20 லட்ச ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்பட்டுயிருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த தீ விபத்து எப்படி ஏற்பட்டது என கே.வி.குப்பம் போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.