/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/zdsfgdsgdgd.jpg)
'நிவர்' புயலானது தற்பொழுது கடலூரிலிருந்து 80 கிலோமீட்டர் கிழக்கு, தென்கிழக்குத் திசையில் மையம் கொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் நகரும் வேகம் 13 கிலோ மீட்டரில் இருந்து 14 கிலோமீட்டராக அதிகரித்துள்ளது. புதுச்சேரியில் இருந்து 85 கிலோ மீட்டரிலும், சென்னையில் இருந்து 160 கிலோ மீட்டரிலும் புயலானது நிலைகொண்டுள்ளது.
செம்பரம்பாக்கம் ஏரியில் முதல் கட்டமாக1,500 கனஅடி நீர் திறக்கப்பட்டநிலையில்,பிற்பகலில் திறக்கப்படும் நீரின் அளவானது 3,000 கனஅடியாக அதிகரித்திருந்தது. மாலை 6 மணி முதல் மேலும் கூடுதலாக 2 ஆயிரம் கனஅடி நீர் அதிகரிக்கப்பட்ட நிலையில்,தற்பொழுது செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறந்து விடப்படும் நீரின் அளவு 7 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. தொடர் கனமழையால் செம்பரம்பாக்கம் ஏரிக்குவரும்நீர்வரத்து என்பது 6,500 கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனால், அடையாறுகரையோரப் பகுதி மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது.
Follow Us