
30 ஆண்டு காலம் சிறைவாசத்திலிருந்து எப்போது விடுதலை கிடைக்கும் எனத் தமிழ்ச் சமூகம் பேரறிவாளன் உட்பட ஏழு பேர் விடுதலைக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது. தமிழக அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியபிறகும், தமிழகஆளுநர்உத்தரவுக்காகக் காத்திருக்கும்அந்த ஏழு பேரும் சிறையிலேயே நாட்களைக் கழிக்கிறார்கள்.
இந்நிலையில், தமிழகம் முழுவதும் 18 -ஆம்தேதி தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் தமிழகஆளுநர் ஒப்புதல் வழங்கவலியுறுத்திக் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஈரோட்டில் த.பெ.தி.க நிர்வாகிகளோடு தமிழ் அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். ம.தி.மு.கஎம்.பிஈரோடு கணேசமுர்த்தி தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
  
 Follow Us