Advertisment

ஒரே மொபட்டில் 7 பள்ளி மாணவர்கள்; தாய்க்கு அபராதம் விதிப்பு

 7 school students on one moped; mother fined

வடபழனியில் சிறுவன் காரை இயக்கி ஏற்படுத்திய விபத்து

அண்மையாகவே பள்ளி மாணவர்கள் இருசக்கர வாகனம் மற்றும் கார் ஆகியவற்றை இயக்கி விபத்துக்குள்ளாகும் சம்பவங்கள் தொடர்பான காட்சிகள் மற்றும் செய்திகள் வைரலாகி வருகிறது. அண்மையில் சென்னை வடபழனியில் பள்ளி மாணவன் ஒருவர் தந்தையின் அனுமதி இல்லாமல் காரை எடுத்துச் சென்று ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதில் சாலையில் ஓரமாக நின்று கொண்டிருந்த ஒரு முதியவர் உயிரிழந்தசம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அது தொடர்பானசிசிடிவி காட்சிகளும் வெளியாகி இருந்தது.

Advertisment

 7 school students on one moped; mother fined

ஒரு மொபட்டில் ஏழு பள்ளி மாணவர்கள் ஆபத்து பயணம்

இந்நிலையில் ஒரே மொபட்டில் பள்ளி மாணவர்கள் 7 சீருடையில் ஆபத்தாக பயணம் செய்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி இருந்தது. வீடியோவின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில் சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் அடுத்துள்ள ஏத்தாப்பூர் பகுதியில் பள்ளி மாணவர்கள் ஏழு பேர் ஒரே மொபட்டில் பயணித்தது தெரிந்தது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் மாணவன் ஓட்டிச்சென்ற அந்த மொபெட் மாணவனின் தாயார் கஸ்தூரி என்பவரின் பெயரில் பதிவாகி இருந்ததால் மாணவனிடம் வாகனத்தை ஓட்ட கொடுத்த தாயாருக்கு காவல் துறையினர் அபராதம் விதித்துள்ளனர்.

Advertisment
viral videos Road Safety children vehicles police
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe