nn

ஈரோட்டில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஈரோடு மாவட்டம், சென்னிமலை அருகே உள்ள சில்லான்காட்டு வலசு பகுதியில் உள்ள மேட்டூர் மயானத்தில் ஒரு கும்பல் பணம் வைத்து சூதாடி வருவதாக சென்னிமலை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த கும்பலைச் சுற்றி வளைத்து பிடித்தனர்.

Advertisment

விசாரணையில் அவர்கள் சென்னிமலை வெப்பிலியை சேர்ந்த சின்னையன் (51), சிவியன்காடு பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜ் (45), தட்டான்காடு பகுதியைச் சேர்ந்த வாசுதேவன் (30), பாலக்காட்டு புதூரை சேர்ந்த அஜித் குமார் (26), மாணிக்கம் (55), வெப்பிலி, அரிஜன் காலனியை சேர்ந்த பரமசிவம் (25), ஒரத்துப்பாளையம் காலனியை சேர்ந்த கார்த்திக்குமார் (31) என்பது தெரியவந்தது.இதையடுத்து, போலீசார் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.மேலும், அவர்களிடமிருந்து சூதாட பயன்படுத்தப்பட்ட சீட்டுகள், பணம் ரூ. 2,700 ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.

Advertisment