Advertisment

40 ஆயிரம் லிட்டர் கலப்பட டீசலுடன் 7 பேர் கைது!

7 people arrested with 40 thousand liters of adulterated diesel!

தூத்துக்குடி மாவட்டம் சிப்காட்டில் கலப்பட டீசல் விற்பனை செய்யப்பட்டது தெரியவந்த நிலையில் அவற்றை பறிமுதல் செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisment

தூத்துக்குடி மாவட்டம் சிப்காட்டில் பையோ டீசல் என்ற முறையில் தயாரிக்கப்பட்ட கலப்பட டீசல் கள்ளச்சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதுகுறித்து தகவல் வெளியான நிலையில் தூத்துக்குடி கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சந்தீப் தலைமையில் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டனர். இதில் சிப்காட் பகுதியில் உள்ள ஒரு தனியார் குடோனில் சுமார் 40 ஆயிரம் லிட்டர் கலப்பட டீசல் பறிமுதல் செய்யப்பட்டது. போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் பெங்களூரிலிருந்து டீசலை லாரியில் கொண்டுவந்து இங்கு அதனை கலப்பட டீசலாக மாற்றி விற்பனை செய்து வந்துள்ளனர். கைப்பற்றப்பட்ட கலப்பட டீசலின் மதிப்பு மொத்தம் 80 லட்சம் என்று தெரியவந்துள்ளது. இது தொடர்பாக தனியார் குடோனை லீசுக்கு எடுத்துள்ள ராஜகோபால், பால்ஆண்டனி, பிரவீன், புஸ்பராஜ், ராமசாமி உள்ளிட்ட மேலும் இரண்டு பேர் என மொத்தம் 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Advertisment

diesel Thoothukudi
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe