Skip to main content

வேலூரில் காய்ச்சலால் 7 மாத கர்ப்பிணி பெண் உயிரிழப்பு!!

Published on 30/10/2018 | Edited on 30/10/2018
 7 months pregnant woman dies due to fever in Vellore

 

வேலூர் மாவட்டம் ஆம்பூரில் காய்ச்சலால் கர்ப்பிணி பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

ஏற்கனவே இன்று காலை வேலூர் மாவட்டம் ஆம்பூரில் பன்றி காய்ச்சலுக்கு தீவிர சிகிச்சை எடுத்து வந்த ருக்மணியம்மாள் என்பவர் உயிரிழந்த நிலையில் அதே வேலூர் மாவட்டம் ஆம்பூர் வீரசாங்குப்பத்தில் வசித்து வந்த 7 மாதம் கர்ப்பிணியான வினோதினி என்ற பெண் காய்ச்சலுக்காக வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்திக்கபட்டிருந்த நிலையில் தற்போது உயிரிழந்துள்ளார்.

இந்த தொடர் உயிரிழப்பு அங்கு பெரும் சோகத்தையும் பீதியையும் கிளப்பியுள்ளது.

சார்ந்த செய்திகள்

Next Story

கேரளாவில் பன்றி காய்ச்சல் தீவிரம்; உஷார் நிலையில் தமிழகம்

Published on 11/01/2023 | Edited on 11/01/2023

 

swine flu in kerala tamil nadu ready to preparedness 

 

பீகார், உத்தராகண்ட், மிசோரம், சிக்கிம், திரிபுரா போன்ற மாநிலங்களில் ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல் பரவி வருவதாக மத்திய அரசு எச்சரித்துள்ளது. இதனைத் தொடர்ந்து கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் இரண்டு பன்றிப்பண்ணைகள் மற்றும் கோட்டயம் மாவட்டத்தில் ஒரு  பன்றிப்பண்ணை என மூன்று பண்ணைகளில் ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

 

கேரளாவில் பன்றி இறைச்சிகள் உணவு புழக்கம் அதிகம் என்பதால் அம்மாநில அரசு பன்றிக்கறி விற்பனைக்குத் தடை விதித்ததுடன், ஆப்பிரிக்கன் பன்றிக்காய்ச்சல் உறுதி செய்யப்பட்ட பண்ணைகளில் உள்ள பன்றிகளுக்கு நோய்கள் மேலும் பரவாமல் தடுக்கும் பொருட்டு அங்குள்ள பன்றிகளைக் கொன்று புதைக்கும் படி உத்தரவிட்டுள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட பல பன்றிகள் உயிரிழந்துள்ளன. இந்தச் சூழலில் கேரளாவில் பரவி வருகிற ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல் அண்டை மாநிலமான தமிழகத்திலும் பரவிவிடக் கூடாது என்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

 

தமிழக - கேரள எல்லையான தென்காசி மாவட்டத்தின் புளியரை சோதனைச்சாவடி அருகே மாவட்டக் கலெக்டர் ஆகாஷ் உத்தரவுப்படி கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இயக்குனர் பொன்னுவேல், உதவி இயக்குனர் மகேஸ்வரி ஆகியோர் அறிவுறுத்தலின்படி கால்நடை மருத்துவர் ஜெயபால் ராஜா தலைமையிலான குழுவினர் முகாமிட்டு தமிழகத்திற்குள் வருகிற கேரள மாநிலத்தின் பன்றிகள் மற்றும் அவற்றின் கழிவுகள், பன்றியின் உணவுகள் மற்றும் கால்நடைகளை ஏற்றி வரும் வாகனங்களை நுழையவிடாமல் தடுத்து திருப்பி அனுப்புகின்றனர்.

 

மேலும், பறவைக்காய்ச்சலும் அதிகமாகப் பரவுவதால் வாத்து, கோழி முட்டை, கோழிகள் போன்ற இனங்களை ஏற்றி வரும் வாகனங்களும் கேரளாவுக்குள் திருப்பி அனுப்பப்படுகின்றன. மற்ற வாகனங்கள்  தீவிரமாகச் சோதனையிடப்பட்டு கிருமிநாசினி மற்றும் நோய்த்தடுப்பு மருந்துகள் தெளிக்கப்பட்ட பின்பே தமிழகத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றன. தமிழக - கேரள எல்லையில் ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல் பரவாமல் தடுக்க தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இப்பணியில் 5 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

 

இதுகுறித்து கால்நடை மருத்துவர் ஜெயபால் ராஜா தெரிவிக்கையில், "கிருமிநாசினி தெளித்த பிறகே தமிழகப் பகுதிக்குள் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. தமிழகத்தில் அதிகமான மக்கள் பன்றி இறைச்சி சாப்பிடுவதில்லை. எனவே பன்றி பண்ணைகளும் இங்கு குறைவு" என்றார். 

 

 

Next Story

தன் மகளை விட அதிக மதிப்பெண் எடுத்த காரணத்திற்காக சிறுவனை கொன்ற தாய்!

Published on 04/09/2022 | Edited on 04/09/2022

 

ரதக

 

காரைக்காலில் குளிர்பானத்தில் விஷம் கலந்து சிறுவனை கொலை செய்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.


காரைக்கால் பகுதியைச் சேர்ந்தவர் ராணி. இவருடைய மகள் அப்பகுதியில் உள்ள பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார்.  அவர்கள் வீட்டிற்கு அருகே உள்ள சிறுவனும் அதே பள்ளியில் அந்த மாணவி உடன் ஒரே வகுப்பில் படித்து வருகிறார். மாணவியை விட மாணவன் மிகவும் திறம்பட படித்து வந்துள்ளார். தேர்வில் அந்த மாணவனே அதிக மதிப்பெண் எடுத்துவந்துள்ளார். இது மாணவியின் தாயாரான ராணிக்கு வருத்தத்தை கொடுத்துள்ளது. இதனால் தன்னுடைய மகள்  சிறுவனை விட குறைவான மதிப்பெண் எடுப்பதை விரும்பாத அவர், சிறுவனை அழைத்து விஷம் கலந்த குளிர்பானத்தை கொடுத்துள்ளார். நண்பரின் தாயார் தானே என்று அவரும் விஷம் கலக்கப்பட்டிருப்பதை அறியாமல் குடித்துள்ளார். சிறிது நேரத்தில் அந்த சிறுவன் மயக்கமடையவே அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் சிறுவனை மருத்துவமனையில் சேர்த்தனர். இந்நிலையில் தற்போது சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மாணவியின் தாயாரை போலீசார் கைது செய்துள்ளனர்.