Advertisment

‘விளைவுகள் நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும்...’- 7 பேர் விடுதலைக்கான மனிதசங்கிலி போராட்டம்

manithachangili

Advertisment

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யக்கோரி புதுச்சேரியில் மனிதசங்கிலி போராட்டம் நடைபெற்றது.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 28 ஆண்டுகளாக சிறையில் உள்ள பேரறிவாளன், நளினி உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யக்கோரி புதுச்சேரி அண்ணா சாலையில் மனிதசங்கிலி போராட்டம் நடைபெற்றது. இதில் புதுச்சேரி மற்றும் கடலூர், விழுப்புரம் மாவட்டங்களைச் சேர்ந்த த.வா.க, த.பெ.தி.க, சிபிஐ, அ.ம.மு.க, வி.சி.க, தி.வி.க உள்ளிட்ட கட்சிகள் மற்றும் பல்வேறு தமிழ் அமைப்புகளை சேர்ந்த 500 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

அப்போது தமிழக அமைச்சரவை தீர்மானப்படி தமிழக ஆளுநர் காலதாமதம் செய்யாமல் 7 பேரின் விடுதலை கோப்பில் கையெழுத்திட வேண்டுமென வலியுறுத்திய போராட்டக்காரர்கள், இல்லையெனில் இதன் விளைவுகள் நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும் என்றனர்.

arputhammal perarivaalan
இதையும் படியுங்கள்
Subscribe