ADVERTISEMENT

'2 லட்சம் கடனுக்கு 7 லட்சம் வட்டி...' கந்து வட்டிக் கொடுமையால் தீக்குளிக்க முயன்ற பெண்கள்

09:07 AM Jan 28, 2020 | kalaimohan

நெல்லை மாவட்டம் களக்காடு சிதம்பராபுரத்தை சேர்ந்த இரண்டு பெண்கள் தொழில் விருத்திக்காக 2 லட்சத்து 20 ஆயிரம் கடன் வாங்கிய நிலையில் 7 லட்சம் வட்டி கட்டிய நிலையில் மேலும் வட்டி கேட்டு கொடுமைப் படுத்தியதைத் தொடர்ந்து ஆட்சியர் அலுவலகத்தில் இரண்டு பெண்கள் உடலில் மண்ணெண்ணை ஊற்றி தீ குளித்த முயற்சித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகம், களக்காடு காவல்நிலையத்திலும் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

நெல்லை மாவட்டம் களக்காடு சிதம்பராபுரத்தைச் சேர்ந்தவர் முருகன், இவரது சகோதரர் புகழ்சேட். இவர்கள் இருவரும் அந்த பகுதியில் சோடா கம்பெனி நடத்தி உள்ளனர். இந்த தொழில் வளர்ச்சிக்கு அதே பகுதியைச் சேர்ந்த வசந்தா மற்றும் ஜானகி ஆகியோரிடம் இருவரும் 2 லட்சத்து 20 ஆயிரம் கடன் வாங்கியுள்ளர் . கடன் வாங்கி சில ஆண்டுகள் ஆன நிலையில் தொழிலில் நஷ்டமான நிலையில் இருவரும் சோடா கம்பெனியை விட்டுவிட்டு கூலி தொழிலுக்கு சென்றுவிட்டனர்.


ஆனால் இதுவரை வாங்கிய கடனிற்காக இதுவரை வார வட்டியாக 7 லட்சம் ரூபாய் கட்டியுள்ளனர் . மேலும் அவர்களிடம் வட்டிகேட்டு கடன் கேட்டவர்கள் தொந்தரவு செய்து வந்துள்ளனர். இதுகுறித்து களக்காடு காவல்நிலையத்தில் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை, பின்னர் கடந்த வாரம் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளனர். ஆனால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனிடையே கடன் கொடுத்தவர்கள் தொடர்ந்து மிரட்டி வந்ததைத் தொடர்ந்து முருகன் மனைவி கிருஷ்ணவேணி , புகழ்சேட் மனைவி பாமா ஆகிய இருவரும் இன்று மனுநீதிநாள் முகாமான நேற்று ஆட்சியர் அலுவலகத்தின் பலத்த போலீஸ் பாதுகாப்பையும் மீறி ஆட்சியர் அலுவலக போர்டிகோவில் இருவரும் உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தீ குளிக்க முயற்சித்தனர். அப்போது அங்கு இருந்து போலீசார் அவர்களை மீட்டனர்.


பின்னர் ஆட்சியர் தீ குளிக்க முயற்சித்தவர்களிடம் நேரடியாக வந்து விசாரணைக்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டார். மேலும் கடந்த 2017-ம் அக்டோபர் 27-ந் தேதி கந்துவட்டி கொடுமை காரணமாக ஆட்சியர் அலுவலகத்தில் தாய் தந்தை குழந்தைகள் என 4 பேர் தீ குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தைத் தொடர்ந்து ஆட்சியர் அலுவலகத்தில் 9 வாயில்களில் 7 வாயில்கள் அடைக்கப்பட்டு, மனு நீதி நாள் முகாமின் போது பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டும் தீ குளிக்க முயற்சிக்கும் சம்பவங்கள் மாதம் தோறும் நடந்து வருகிறது. என்பது குறிப்பிடத்தக்கது.


மீண்டும் இன்று ஆட்சியர் அலுவலகத்தில் இரண்டு பெண்கள் தீ குளிக்க முயற்சித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தீ குளிப்பு சம்பவத்தை அடுத்து வழக்கம்போல் காவல்துறை துரிதமாகி ஆட்சியர் அலுவலகத்திற்கு வருபவர்களை பாதுகாப்பு என்ற பெயரில் அச்சுறுத்தி வருகின்றனர்.

அடுத்த ஒரு சம்பவமாக ஆலங்குளத்தை சேர்ந்த சித்ரா என்ற பெண் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்தபோது அங்குள்ள மரத்தில் உள்ள அரளி விதையை அரைத்துக் குடித்து மயக்கம் 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT