Advertisment

காதல் ஜோடி தங்கியிருந்த வீட்டில் 7 லட்ச ரூபாய் கள்ளநோட்டுகள்!

7 lakh counterfeit notes in coimbatore

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தகாதலர்கள் வீட்டை விட்டு வெளியேறி கோவை சேரன்மாநகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில்நண்பர்களுடன் தங்கி இருந்துள்ளார்கள். அந்தப்பெண்ணின் வீட்டார் தங்களது மகளைக் காணவில்லை என புதுக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

Advertisment

புதுக்கோட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டபோது, கோவை சேரன் மாநகரில் இருப்பது தெரியவந்தது.இது தொடர்பாக புதுக்கோட்டை போலீசார், பீளமேடு காவல் துறைக்குத் தகவல் தெரிவித்து அவர்களுடன்குறிப்பட்ட வீட்டிற்குநேரில் சென்றனர். அப்போது போலீசார் வருவதை அறிந்து எல்லோரும் ஓடி விட்டனர்.

Advertisment

வீட்டில் யாரும் இல்லாத நிலையில், பீளமேடு போலீசாரும், புதுக்கோட்டை போலீசாரும்அந்த வீட்டிற்குள் சென்று பார்த்தனர். அப்போதுஜெராக்ஸ் எடுக்கப்பட்ட 2,000 ரூபாய் கள்ள நோட்டுகள் 4 கட்டுகள் இருந்தது. அவற்றை கைப்பற்றியபோலீசார், அதை எண்ணிப்பார்க்கும்போது,7.5 லட்சம் ரூபாய் இருப்பது தெரியவந்தது.

பணத்தைக் கைப்பற்றிய போலீசார், சேரன் மாநகர் வீட்டில் தங்கியிருந்தபுதுகோட்டை காதல் ஜோடி மற்றும் அவருடன் தங்கியிருந்த நண்பர்கள் குறித்தும் விசாரித்து வருகின்றனர்.

Coimbatore
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe