தமிழகத்தில் 7 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம்!

 7 IAS officers transferred in Tamil Nadu

தமிழகத்தில் 7 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

நில நிர்வாக இணை ஆணையராக செந்தாமரை நியமிக்கப்பட்டுள்ளார். பொதுப்பணித் துறை இணைச் செயலாளராக மகேஸ்வரி ரவிக்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளராகஅருணா நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் கூடுதல் இயக்குனராக ஸ்வர்ணகுமார்ஜாதவத் நியமனம் செய்யப்பட்டுள்ளார். வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறைச் செயலாளராக ஆனி மேரி ஸ்வர்ணா நியமனம் செய்யப்பட்டுள்ளார். நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை இணைச் செயலாளராக ஜான் லூயிஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் சி.இ.ஓவாக லட்சுமி நியமிக்கப்பட்டுள்ளார்.

ias TNGovernment
இதையும் படியுங்கள்
Subscribe