தமிழகத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 7 பேருக்குமுதன்மைச் செயலாளர்களாக பதவி உயர்வு அளித்து, தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, பீலா ராஜேஷ், சத்யபிரதா சாஹு, கார்த்திகேயன், ஸ்வர்ணா, ஆஷீஷ் வச்சானி, பங்கஜ்குமார் பன்சால், ஹர்ஷகாய் மீனா உள்ளிட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு அரசின் முதன்மைச் செயலாளர்களாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, சுகாதாரத்துறைச் செயலாளர், வணிக வரித்துறை செயலாளர் போன்ற பதவிகளில்இருந்த பீலா ராஜேஷ், முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.