Advertisment

திருச்சியில் வீட்டுக்குள் புகுந்த 7 அடி நீளப் பாம்பு!  

A 7-foot-long snake entered the house in Trichy

திருச்சி விமான நிலையம் காமராஜ் நகர் அந்தோணியார் கோயில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஸ்வரி. இவர் இன்று காலை வீட்டில் சமையலறையில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது ஹாலில் மேசை மீது இருந்த பொருட்கள் திடீரென தவறி விழுந்தன. சப்தம் கேட்டு ஹாலுக்கு வந்து பார்த்தபோது, மேசை மீது சுமார் 7 அடி நீளப்பாம்பு ஒன்று நெளிந்து கொண்டு இருந்தது. உடனே அலறியடித்து வீட்டை விட்டு வெளியே ஓடி வந்த அவர், கதவை சாத்தினார்.

Advertisment

அக்கம் பக்கத்தினர் வந்து வீட்டுக்குள் பாம்பை தேடிய போது எங்கோ பதுங்கிக் கொண்டது. பின்னர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். இதனை அடுத்து விரைந்து வந்த திருச்சி தீயணைப்பு நிலைய அலுவலர் சத்தியவர்த்தன் தலைமையிலான வீரர்கள், சுமார் அரை மணி நேரம் போராடி வீட்டுக்குள் இருந்த பாம்பை மீட்டனர். பின்னர் பாம்பு பாதுகாப்பாக வனப்பகுதியில் விடப்பட்டது. கடந்த சில நாள்களுக்கு முன்பு இதே பகுதியில் இதே போன்றதொரு பாம்பு வனத்துறையால் பிடிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

Advertisment
snake trichy
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe