7 electrical engineers abruptly relocated!

Advertisment

தமிழக அரசு மின்வாரியத்தில் பல்வேறு மாவட்டங்களில் பணியாற்றி வரும் செயற்பொறியாளர்கள் திடீரென்று இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

இதுகுறித்து மின்வாரியம் பிறப்பித்த உத்தரவில், சேலம் மாவட்டத்தில் சேலம் மின்பகிர்மான வட்டத்தில் தலைமை அலுவலகமான உடையாப்பட்டி மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தில் பொதுப்பிரிவு செயற்பொறியாளராக பணியாற்றி வந்த ஏழுமலை, சிங்காரப்பேட்டை துணை மின் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.

சேலம் துணை மின் நிலைய ரிமோட் கன்ட்ரோல் பிரிவு செயற்பொறியாளர் புஷ்பலதா, மேற்பார்வை பொறியாளர் அலுவலக பொதுப்பிரிவுக்கு மாற்றப்பட்டார்.

Advertisment

சேலம் துணை மின்நிலைய ரிமோட் கன்ட்ரோல் பிரிவுக்கு ராசிபுரம் செயற்பொறியாளர் நாகராஜன் மாற்றப்பட்டுள்ளார்.சேலம் மேற்கு கோட்ட செயற்பொறியாளர் தமிழ்மணி, மேட்டூர் மின்பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட இடைப்பாடிக்கும், சேலம் மேற்கு கோட்டத்திற்கு உடுமலைப்பேட்டையில் பணியாற்றி வந்த ராஜவேலுவும் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

இடைப்பாடியில் பணியாற்றி வந்த செயற்பொறியாளர் செல்வம் ராசிபுரத்திற்கும், காலியாக இருந்த ஓமலூர் கோட்டத்திற்கு செய்யாறு செயற்பொறியாளர் சங்கரசுப்ரமணியமும் மாற்றப்பட்டுள்ளனர்.