Skip to main content

பேருந்துக்காக காத்திருந்த பயணிகளின் உயிரை பறித்த சொகுசு கார்! - 7 பேர் பரிதாபமாக உயிரிழப்பு!

Published on 01/08/2018 | Edited on 27/08/2018



பெள்ளாச்சி நோக்கி சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து எதிரே நின்று கொண்டு இருந்த ஆட்டோ மீது மோதி பேருந்துக்காக காத்திருந்த பயணிகள் மீது மோதியதில் ஏழு பேர் உயிரிழந்தனர்.

கோவை பொள்ளாச்சி சாலையிலுள்ள சுந்தராபுரம் ஐயர் மருத்துவமனை அருகே அதிவேகமாக சொகுசு கார் ஒன்று வந்துள்ளது. அப்போது ஒட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த அந்த சொகுசு கார் எதிரே நின்று கொண்டு இருந்த ஆட்டோ மீது மோதி பேருந்துக்காக காத்திருந்த பொதுமக்கள் 10 பேர் மீது மோதியதில் ஏழு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

இதில் ஐந்து பெண்கள், இரண்டு ஆண்கள் இறந்துள்ளனர். மேலும், படுகாயமடைந்த இருவருக்கு அருகிலுள்ள மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஒரு சிலருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் கோவை ஈச்சனாரியிலுள்ள ரத்தினம் கல்லூரியின் உரிமையாளரின் கார் எனத்தெரிய வந்துள்ளது. காரை ஒட்டி வந்த ஜெகதீஷ் மயக்கம் ஏற்பட்டு கார் தனது கட்டுப்பாட்டை இழந்ததாக கூறியுள்ளார். அவரை பிடித்த பொதுமக்கள் தர்ம அடி கொடுத்ததில் காயமைடந்தவருக்கு அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சார்ந்த செய்திகள்