Advertisment

"வெளிநாடுகளில் இருந்து வந்தால் 7 நாள் தனிமை கட்டாயம்" - அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேட்டி!

publive-image

Advertisment

சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், "ஒமிக்ரான் பரவலைத் தடுக்க வெளிநாடுகளிலிருந்து தமிழ்நாடு வரும் பயணிகள் அனைவருக்கும் நாளை (26/12/2021) முதல் 7 நாள் தங்களை வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்வது கட்டாயம் ஆகும். 'Risk' நாடுகள் மட்டுமின்றி, 'NonRisk' நாடுகளிலிருந்து வருவோருக்கும் 7 நாள் தனிமை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 'NonRisk' நாடுகளிலிருந்து வருவோருக்கான பரிசோதனை விகிதம் 2%- லிருந்து 10% ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

வெளிநாடுகளிலிருந்து தமிழ்நாடு வந்தவர்களில் 39 பேருக்கு 'ஒமிக்ரான்' அறிகுறி கண்டறியப்பட்டுள்ளது. அவர்களுக்கான பரிசோதனை முடிவுகள் 5 நாட்களில் வரும். 'ஒமிக்ரான்' பாதிப்பிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 7- லிருந்து 12 ஆக அதிகரித்துள்ளது. கூட்டமாகப் புத்தாண்டு கொண்டாட்டங்களில் ஈடுபட வேண்டாம். 'ஒமிக்ரான்' வேகமாகப் பரவும் என்பதால், நட்சத்திர விடுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டத்தைத் தவிருங்கள். அதிகம் பேர் கூடும், ஆடல், பாடல் போன்ற நிகழ்ச்சிகளை விடுதி உரிமையாளரும், மக்களும் தவிர்க்க வேண்டும். புத்தாண்டு கொண்டாட மக்கள் பிற மாநிலங்களுக்குச் செல்வதையும் தவிர்க்க வேண்டும்" என்று அறிவுறுத்தினார்.

pressmeet Tamilnadu
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe