pra

ராஜிவ் காந்தி வழக்கில் சிறையில் இருக்கும் 7 தமிழர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி பல்வேறு தரப்பினரும் அழுத்தம் கொடுத்தாலும் விடுதலை செய்ய மறுத்து காலம் கடத்தி வருகின்றனர். தற்போது தமிழக ஆளுநர் இந்த பிரச்சனையில் நல்ல முடிவெடுக்க வேண்டும் என்று பல்வேறு அமைப்புகள், இயக்கங்கள், இளைஞர்கள் அரசியல் கட்சிகள் அழுத்தமான கோரிக்கை வைத்து வந்தாலும் முடிவெடுக்க தாமதம் ஆகி வருகிறது.

Advertisment

இந்த நிலையி்ல்தான் மதுரை இளைஞர் ராசராசன் சாலினி திருமணம் மதுரை வடக்கு மாசிவீதி தருமை ஆதீனம் மண்டபத்தில் நடந்தது. இந்த திருமண அழைப்பிதழ் வித்தியாசமாக அச்சடிக்கப்பட்டிருந்தது. மணமக்கள் பெயருக்கு முன்னால் உழவன் ராசராசன், உழத்தி சாலினி என்று அச்சிட்டு வாழ்த்த போராளிகளான டிராப்பிக் ராமசாமி, சமூக செயற்பாட்டாளர்கள் முகிலன், ராசேஸ்வரி, செயராமன், போன்றவர்களை அழைத்திருந்தனர்.

Advertisment

pra

வைக்கப்பட்ட பதாகைகளிலும் தந்தை பெரியார், விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் இயற்கை வேளான் விஞ்ஞானி நம்மாழ்வார் போன்றவர்களின் படங்களுடன் இருந்தது.

மணவிழா நடந்து முடிந்த நிலையில் ஏழு தமிழர் விடுதலையை வலியுறுத்தி உழவன் ராசராசன் உழத்தி சாலினி ஆகியோர் தமிழக ஆளுநருக்கு அஞ்சல் அட்டை அனுப்பினார்கள். அதே போல வாழ்த்த வந்து உறவினர்களும் நண்பர்களுக்கும் அஞ்சல் அட்டை வழங்கப்பட்டது. அவர்களும் அஞ்சல் அட்டை அனுப்பி வாழ்த்தினார்கள்.

Advertisment

ஏழு தமிழர் விடுதலையே எங்கள் மண வாழ்வுக்கு மனநிறைவான வாழ்க்கை என்றனர் உழவனும் உழத்தியும்.