சென்னையை அடுத்த கோவலம் புனித சூசையப்பர் பள்ளியில் 6ஆம் வகுப்பு படித்துவரும் மாணவருக்கு பள்ளியின் விடுதி பயிற்சி பாதிரியார்சூடு போட்டது பெரும் சர்ச்சைக்குள்ளாகி உள்ளது. இதையடுத்து பாதிரியார் மீது காவல்நிலையத்தில் அளித்த புகாரை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

arrest

சென்னையை அடுத்த கோவலத்திலுள்ள புனித சூசையப்பர் பள்ளியில் விடுதியின் பயிற்சி பாதிரியாராகபணியாற்றி வருபவர் ரட்சகதாஸ். இவர் அதே பள்ளியில் படித்து வரும் 6ஆம் வகுப்பு மாணவனின் மீது செல்போன் திருடியதாக சுமத்தப்பட்ட குற்றத்திற்காக மாணவனுக்கு சூடுபோட்டுள்ளார். அடுத்த நாள் இதுபற்றி அறிந்த அந்த மாணவனின் பெற்றோர் கேளம்பாக்கம் காவல்நிலையத்தில் புகாரளித்ததை தொடர்ந்து பயிற்சி பாதிரியார்ரட்சகதாஸ் கைதுசெய்யப்பட்டார்.