Advertisment

சுவாமி சகஜானந்தாவின் 66-வது நினைவு தினம்

66th Death Anniversary of Swami Sahajananda

கடந்த 120 ஆண்டுகளுக்கு முன்பு அனைத்து ஏழை எளிய மக்கள் கல்வியால் மட்டுமே முன்னேற முடியும் என ஒருங்கிணைந்த தென்னாற்காடு மாவட்டமாகஇருந்த காலத்தில் சிதம்பரத்தில் கல்வி நிறுவனங்களை நிறுவியவரும், 40 ஆண்டுகளுக்கு மேலாக சட்டமன்றம் மற்றும் சட்ட மேலவை உறுப்பினராக பணியாற்றி தமிழக சட்டப்பேரவை தந்தை என்று அழைக்கப்பட்ட சுவாமி சகஜானந்தாவுக்கு அவர் வாழ்ந்த இடமான சிதம்பரம் நந்தனார் ஆண்கள் பள்ளி அருகே தமிழக அரசு சார்பில் மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.

Advertisment

மணிமண்டபத்தில் அவரது 66-வது நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் நந்தனார் கல்விக் கழகத்தின் தலைவர் மணிரத்தினம் மற்றும் மணிமண்டபம் ஒருங்கிணைப்பாளர் பாலையா உள்ளிட்ட நந்தனார் கல்விக்கழகம் உறுப்பினர்கள், நிர்வாகிகள் பல்வேறு அரசியல் கட்சியினர் பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள், பள்ளியில் பயிலும் மாணவர்கள் என அனைத்து தரப்பினரும் அவரது உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

Advertisment
chithambaram district Cuddalore sakajanantha
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe