Advertisment

65 வயது பெண்ணின் 45 ஆண்டுகால ஆசை; நிறைவேற்றி வைத்த முதல்வர்

A 65-year-old woman's 45-year desire; Chief Minister who executed

Advertisment

மனிதராகப் பிறந்த ஒவ்வொருவரும் விதவிதமான ஆசைகளை மனதில் தேக்கி வைத்திருப்பார்கள். சேலம் அய்யம்பெருமாள்பட்டியைச் சேர்ந்த 65 வயதான கண்ணம்மாள் மனதிலும் நிறைவேறாத வாழ்நாள் ஆசை ஒன்றிருந்தது. அது நிறைவேறியிருக்கிறது.

என்ன ஆசை? எப்படி நிறைவேறியது?

கடந்த 45 ஆண்டுகளாக தற்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினோடுபோட்டோ எடுக்க வேண்டும் எனத் தொடர்ந்து முயற்சித்து வந்தார் கண்ணம்மாள். ஆசை இருந்தாலும் அதை அடைவதற்கான வழிகள் எதுவும் பிடிபடவில்லை. இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்சேலத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளச் சென்றிருந்தார். அப்போது ஐந்து ரோடு அருகே முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் மனு ஒன்றைக் கொடுத்தார் கண்ணம்மாள். அந்த மனுவில்,‘உங்களுடன் புகைப்படம் எடுப்பதற்கு பல ஆண்டுகளாகமுயற்சித்து வருகிறேன்.’ என்று எழுதியிருந்தார். இதனைத் தொடர்ந்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்ணம்மாளை அழைத்து அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். கண்ணம்மாளும் தனது நெடுநாள் ஆசை நிறைவேறியதால் மகிழ்ச்சியடைந்தார்.

இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe