மேட்டூர் அணையிலிருந்து நீர் திறப்பு 65 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.
சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு 60 ஆயிரம் கனஅடியாக இருந்த நிலையில் தற்போது 65 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அணையின் தற்போதைய நீர்மட்டம் 120.43 அடியாகவும், நீர் இருப்பு 94.15 டிஎம்சி ஆகவும் உள்ளது.
தமிழகத்தின் எல்லையான பிலிகுண்டுலுவிற்கு வினாடிக்கு 75 ஆயிரம் கனஅடி நீர் வந்துகொண்டிருக்கிற நிலையில்அணைக்கு நீர்வரத்து 73 ஆயிரம் கனஅடியாக உள்ளது.இந்நிலையில் மேட்டூர் அணையிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு 65 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.