Advertisment

640 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

640 special buses running

இந்த வருடம் கிறிஸ்துமஸ் பண்டிகை டிசம்பர் 25 ஆம் தேதி திங்கள் கிழமை கொண்டாடப்பட உள்ளது. இந்தச்சூழலில் வார விடுமுறை மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி வெளியூரிலிருந்து பயணிகள் சொந்த ஊருக்குச் செல்ல அரசு சார்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

Advertisment

அதன்படி கிறிஸ்துமஸ் மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு பயணிகள் வசதிக்காக 640 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாகத்தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. அதன்படி தமிழகம் முழுவதும் தினசரி இயக்கக்கூடிய 2 ஆயிரத்து 100 பேருந்துகளுடன் டிசம்பர் 22 ஆம் தேதி கூடுதலாக 350 பேருந்துகளும், 23 ஆம் தேதி கூடுதலாக 290 பேருந்துகளும் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

Advertisment

மேலும் சென்னையிலிருந்து திருநெல்வேலி, நாகர்கோவில், மார்த்தாண்டம், தூத்துக்குடி, வேளாங்கண்ணி உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்குப் பயணம் மேற்கொள்ள சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன என அறிவிக்கப்பட்டுள்ளது.

bus christmas
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe