தமிழகத்தில் முதற்கட்டமாக 630 மினி கிளினிக்குகளை இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்கிறார்.
தமிழகத்தில் 2,000 மினி கிளினிக்குகள் அமைக்கப்படும் என ஏற்கனவே தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். அதன்படி, கிராமப்புறம் 1400, சென்னை 200, நகர்ப்புறங்களில் 200, நகரும் மினி கிளினிக்குகள் 200 அமைக்கப்படுகின்றன. இந்த மினி கிளினிக்குகளில் மருத்துவர், செவிலியர், சுகாதாரத்துறை பணியாளர் என தலா ஒருவர் பணியில் இருப்பர். மினி கிளினிக்குகள் காலை 09.00 மணி முதல் 11.00 மணி வரையும், மாலை 04.00 மணி முதல் 07.00 மணி வரையும் செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது.