/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/ips-art_5.jpg)
தமிழக அரசின் சார்பில் அவ்வப்போது பல்வேறு நிர்வாக காரணங்களுக்காக ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அதோடு ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளுக்குப் பதவி உயர்வு மற்றும் கூடுதல் பொறுப்புகளும் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தமிழகம் முழுவதும் 56 ஐ.பி.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அந்த வகையில் சென்னையில் பணியாற்றி வரும் ஐ.ஜி.க்கள் சிலர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் கன்னியாகுமரி, சிவகங்கை, தென்காசி, தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய மாவட்ட எஸ்.பி.க்களும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் ஐ.பி.எஸ். அதிகாரிகள் 7 பேருக்கு பதவி உயர்வு அளித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி திருச்சி மாவட்ட எஸ்.பி. வருண்குமாருக்கு டி.ஐ.ஜி.யாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அதோடு திருச்சி எஸ்.பி.யாக செல்வநாகரத்தினம், அரியலூர் எஸ்.பி.யாக தீபக் சிவச், தஞ்சாவூர் எஸ்.பி.யாக ராஜாராம் நியமிக்கப்பட்டுள்ளனர். கன்னியாகுமரி எஸ்.பியாக ஸ்டாலின் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஏ.டி.ஜி.பி .மகேஷ்குமார் அகர்வால் ஆயுதப்படை சிறப்பு டி.ஜி.பி.யாகவும், ஏ.டி.ஜி.பி. வெங்கட்ராமனுக்கு நிர்வாகப் பிரிவு சிறப்பு டி.ஜி.பி.யாகவும், வினித் தேவ் சிறப்பு டி.ஜி.பி.யாகவும் பதவி உயர்வு வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த அதிரடி உத்தரவின் மூலம் தமிழகம் முழுவதும் மொத்தம் 63 காவல்துறை உயர் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அந்த வகையில் 3 ஏ.டி.ஜி.பிக்களுக்கு டி.ஜி.பி.க்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. ஐஜி, துணை ஆணையர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)