தமிழகத்தில் கரோனாவால்பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1372 ஆக இருக்கும் நிலையில், ஒரே நாளில்நேற்று 49 பேருக்குகரோனாஉறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை குணமடைந்தவர்கள்எண்ணிக்கை 375 ஆகஉள்ளது.
இந்நிலையில் தமிழகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த கரோனா பரிசோதனை ரேபிட் கிட்களில்6,000 கிட்கள்சென்னை மாநகராட்சிக்கு வந்துள்ளதாக சென்னை மாநகராட்சிஆணையர்பிரகாஷ் தெரிவித்தார். முதற்கட்டமாக வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்குஇந்த கிட்கள் மூலம் பரிசோதனை நடைபெறும் எனவும்,இதற்காக 26 பரிசோதனை மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.