Advertisment

அமைச்சர் உதயநிதியின் கையெழுத்துடன் 6 ஆயிரம் கிரிக்கெட் பேட்கள்; பிரம்மாண்டமாக நடத்தப்பட்ட கிரிக்கெட் போட்டி

6000 bat was given with the signature of Minister Udayanidhi

தமிழர் திருநாளை ஒட்டி இளைஞர்களை திரட்டவும் அவர்களை உற்சாகப்படுத்தவும் சென்னை தெற்கு மாவட்டத்தில் திமுக சார்பில் 3 ஆயிரம் கிரிக்கெட் அணிகள் பங்கேற்ற பிரம்மாண்ட கிரிக்கெட் போட்டி கடந்த ஒரு மாதமாக நடத்தப்பட்டு இன்றுடன் நிறைவடைந்தது.

Advertisment

இன்று மாலை வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள்வழங்கும் விழா நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற அணிகளுக்கு அமைச்சர் உதயநிதி பரிசுகளை வழங்கினார். இதில் மாவட்ட அளவில் வெற்றி பெற்ற அணிகளுக்கு முதல் பரிசாக கோப்பையும் ரூ. 2 லட்சம் ரொக்கமும், இரண்டாவது பரிசாக கோப்பையும் ரூ.1 லட்சம் ரொக்கமும்பரிசாக வழங்கப்பட்டது.

Advertisment

போட்டியில் பங்கேற்ற 3 ஆயிரம் அணிகளுக்கும் 2 கிரிக்கெட் மட்டைகள், பந்துகள், ஸ்டெம்புகள் அடங்கிய கிரிக்கெட் கிட் வழங்கப்பட்டுள்ளது. இதற்காக 6 ஆயிரம் கிரிக்கெட் மட்டைகள் இலங்கையில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது. இறக்குமதி செய்யப்பட்ட மட்டைகள் அனைத்திலும் உதயநிதி ஸ்டாலின் கையெழுத்து பொறிக்கப்பட்டுள்ளது. இறுதிப்போட்டியில் வெற்றிபெற்று வேளச்சேரி மன்சூர் பாய்ஸ் அணி கோப்பையைதட்டிச்சென்றது.

Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe