'60 rupees theft' - 27 years absconding arrested

60 ரூபாய் வழிப்பறி செய்யப்பட்ட வழக்கில் கிட்டத்தட்ட 27 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Advertisment

மதுரை ஜக்காத்தோப்பை சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவர் மீது 27 ஆண்டுகளுக்கு முன்பு 60 ரூபாய் வழிப்பறி செய்யப்பட்டதாக புகார் கொடுக்கப்பட்டிருந்தது. இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை செய்யப்பட்ட நிலையில் 27 ஆண்டுகளாக பன்னீர்செல்வம் தலைமறைவாக இருந்து வந்தார். இதனால் அவருக்கு பிடிவாரண்ட் பிடிக்கப்பட்டது.

Advertisment

இந்நிலையில் பன்னீர்செல்வம் சிவகாசியில் குடும்பத்துடன் வசித்து வந்தது தெரிய வந்தது. மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிக்கு செல்வதைபோல் அவர் தங்கியிருந்த பகுதிக்கு சென்ற போலீசார் குடும்பத்தில் உள்ளவர்கள் குறித்து விசாரித்ததில் பன்னீர்செல்வம் இருந்தது தெரியவந்தது. அவர் சிவகாசியில் உள்ள மது விற்பனை கடையில் பணியாற்றி வந்தது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.