பொது வேலைநிறுத்தம் இரண்டாம் நாள்; சென்னையில் 60 சதவிகித பேருந்துகள் இயக்கம் ( படங்கள்)

நாடு முழுவதும் மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் 2 நாள் வேலை நிறுத்தம் நேற்று (28.3.2022) காலை தொடங்கி இரண்டாவது நாளான இன்று வரை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. வேலை நிறுத்தம் நடைபெறுவதையொட்டி தமிழகம் முழுவதும் சுமார் ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.சென்னை உள்பட தமிழகத்தின் பல இடங்களில் குறைந்த அளவே பேருந்துகள் நேற்று(28.3.2022) இயக்கப்பட்டது. இதனால் பயணிகள் பெரிதும் அவதிக்கு ஆளாகினர். இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் இன்று 60 சதவிகிதம் பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.பொது வேலை நிறுத்தத்தின்2 ஆம் நாளான இன்று பாரிமுனை பேருந்து நிலையத்தில் 60 சதவிகித மாநகர பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளது. மேலும்சென்னையில் பெரும்பாலான பகுதிகளில் 60 சதவீத பேருந்துகள் இயக்கப்படுவதால் நேற்றையநிலையில் இருந்த பொதுமக்கள் இன்று சற்று ஆறுதல் அடைந்துள்ளனர்.

Chennai public transport strike
இதையும் படியுங்கள்
Subscribe