/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/17_233.jpg)
ராணிப்பேட்டை மாவட்டம், ராணிப்பேட்டை அருகே உள்ள புளியங்கன்னு பகுதியைச் சேர்ந்த ரஞ்சித் குமார் (23), கோபி (19), பிரசாந்த் (25), காரை பகுதியை சேர்ந்த புஜித் (21), ராணிப்பேட்டையை சேர்ந்த ஜாக்சன் (24), தமிழ்செல்வன் (26) ஆகிய ஆறு இளைஞர்கள் ராணிப்பேட்டை மேம்பாலத்தின் அடியில் போதையில் ரகளையில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இது குறித்து ரகசிய தகவல் கிடைத்ததையடுத்து போலீசார் விரைந்து சென்றனர்.
போலீசாரை பார்த்ததும் ஆறு இளைஞர்கள் தலைதெறிக்க ஓடியுள்ளனர். அவர்களை துரத்திப் பிடித்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில், ரயில் மூலம் பயணம் செய்து மும்பையில் உரிய அனுமதி இல்லாமல் அதிக வலி நிவாரண மாத்திரைகளை வாங்கி வந்து அதனை ஒரு மாத்திரை 300 ரூபாய்க்கு விற்பனை செய்து வந்ததோடு, ஆறு இளைஞர்கள் வலி நிவாரண மாத்திரைகளைப் போட்டு ரகளை ரகளையில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து, போலிசார் அவர்களிடமிருந்து 500 மாத்திரைகளைப் பறிமுதல் செய்ததோடு, வழக்குப் பதிவு செய்து அந்த 6 இளைஞர்களையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இது போன்று முறைகேடாக வலி நிவாரண மாத்திரைகள் எல்லாம் பயன்படுத்தி வருங்கால இளைஞர்கள் சீரழிந்து போவதை முற்றிலுமாக தடுக்கும் வகையில் நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2019-02/02 Raja.jpg)