Advertisment

கை,கால் கட்டப்பட்டு 6 வயது பெண்குழந்தை கொலை... கோவையில் பரபரப்பு

கோவை பன்னிமடையை சேர்ந்த பள்ளிக்குச் சென்ற சிறுமி வீடு திரும்பாத நிலையில் இன்று அதிகாலை கைகள் கட்டப்பட்டு பிணமாக கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

murder

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

Advertisment

கோவை பன்னிமடை அருகே உள்ள திப்பனூர் பகுதியை சேர்ந்த தம்பதியினர் சதீஸ் மற்றும் வனிதா. இவர்களுக்கு ஏழு வயது பெண் குழந்தை ஒன்று உள்ளது. இந்தக் குழந்தை அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 1ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் சிறுமி நேற்று பள்ளி முடிந்து வீட்டுக்கு வழக்கம்போல சென்று கொண்டிருந்தார். ஆனால் சிறுமி நேற்று மாலை வரை வீடு திரும்பவில்லை. இதையடுத்து சந்தேகம் அடைந்த பெற்றோர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். மேலும்

உறவினர்கள் அக்கம் பக்கத்தினர் என அனைவரும் பல்வேறு பகுதியில் விடிய விடிய தேடினர்.

இந்த நிலையில் இன்று அதிகாலை 4 மணி அளவில் கஸ்தூரிநாயக்கன் புதூர் என்கிற இடத்தில் கத்தியால் அறுபட்ட காயங்களோடு கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் சிறுமி பள்ளத்தில் பிணமாக கிடந்துள்ளார்.

இந்த சம்பவத்தை அடுத்து குழந்தையின் பிரேதத்தை கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். மேலும் இது தொடர்பாக துடியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பள்ளிக்குச் சென்ற சிறுமி பிணமாக சாலையோரத்தில் கிடந்த சம்பவம் கோவை மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

police child school girl murder kovai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe