Advertisment

6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை... ஒருவர் கைது!

கோவையில் 6 வயது சிறுமிபாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தற்போது ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட அந்த நபர் அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததை ஒப்புக் கொண்டதாகவும் தகவல்கள் வந்துள்ளது.

Advertisment

 6-year-old girl sexually assaulted and killed ... one arrested!

கோவை மாவட்டம் துடியலூர் பகுதியில் பன்னிமடையைசேர்ந்த சிறுமி ஒருவர் கடந்த 26ஆம் தேதி கை கால்கள் கட்டப்பட்டடு கொலை செய்யப்பட்ட நிலையில்உடல் மீட்கப்பட்டது. இது வெறும் கொலை அல்ல சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் எனபிரேத பரிசோதனையில் தெரியவந்தது.

 6-year-old girl sexually assaulted and killed ... one arrested!

Advertisment

தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் குற்றவாளிகள் விரைவில் பிடிக்க வேண்டும் என மக்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் மத்தியில் கண்டனங்கள் எழுந்த வந்தது. இதற்காக போராட்டங்களும் துடியலூர் சிக்னலில் நடைபெற்றது. ஆனால் போலீசார் குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவர்என்றுகொடுத்த வாக்குறுதி அடுத்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. அதேபோல் சிறுமியின் பெற்றோர்கள் பிரேத பரிசோதனைக்கு பிறகு உடலை பெற்றுக்கொண்டனர்.

 6-year-old girl sexually assaulted and killed ... one arrested!

ஆனால் அதற்கு அடுத்த நாளே இந்தக் கொலை வழக்கில் எளிதில் துப்பு துலக்க முடியாததால் காவல் துறை சார்பாக ஒரு நோட்டீஸில் வெளியிடப்பட்டது.அதில் இந்த கொலை தொடர்பாக துப்பு கொடுக்கப்பட்டால் உரிய சன்மானம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. அதேபோல் துப்பு கொடுத்தவர் பற்றிய விவரங்கள் ரகசியம் பாதுகாக்கப்படும் என்றும் கூறப்பட்டது.மேலும் 10 பேர் கொண்ட தனிப்படை விசாரணை மேற்கொண்டுவந்தனர்.

mm

இந்நிலையில் இந்த வழக்கில் கோவை தொண்டாமுத்தூரை சேர்ந்த சந்தோஷ் குமார் என்பவரை போலீசார் கைது செய்து விசாரித்தனர். விசாரணையில் சந்தோஷ் சிறுமியை பாலியல் கொடூரம் செய்து கொலை செய்தது நான்தான் என ஒப்புகொண்டுள்ளதாகவும் தகவல்கள் வந்துள்ளது.

arrest police murder Sexual Abuse kovai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe