6-year-old girl incident  in Bihar

பீகார் மாநிலம் கயா மாவட்டத்தில் உள்ள உச்சிர்வான் கிராமத்தில் வசிக்கும் 6 வயது சிறுமி ஒருவர் தனது வீட்டில் நேற்று முன் தினம் இரவு தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள், தூங்கிக்கொண்டிருந்த சிறுமியை வீடுபுகுந்து கடத்திச் சென்றனர். பின்பு சிறுமியை வன்கொடுமை செய்து கொடூரமாகக் கொலைச் செய்துள்ளனர். இதையடுத்து சிறுமியின் உடலை அந்த பகுதியில் உள்ள ஆற்றங்கரையில் வீசிவிட்டுச் சென்றுள்ளனர்.

Advertisment

இந்த நிலையில் ஆற்றாங்கரை வழியாகச் சென்றவர்கள் சிறுமி ஒருவரின் உடல் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து காவல்துறைக்குத் தகவல் கொடுத்துள்ளனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்து சிறுமியின் உடலை மீட்டு பிரேதப்பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸார் சம்பவத்தில் ஈடுபட்ட 2 இளைஞர்களையும் கைது செய்தனர். அப்போது இருவரில் ஒருவரை அந்த கிராமத்தினர் போலீசார் முன்னிலையில் வைத்து தர்ம அடி கொடுத்தனர். பின்னை போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வரை மீட்டு காவல்நிலையம் அழைத்து வந்தனர்.

Advertisment

கைது செய்யப்பட்ட இரண்டு இளைஞர்களிடம் காவல்நிலையத்தில் வைத்து விசாரணை நடத்திவரும் நிலையில் கிராம மக்கள் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். பின்பு போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். 6 வயது சிறுமியைக் கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை கொன்ற சம்பவம் கிராமத்தினர் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.