6 year old boy breaks world record by singing 72 ragas ..!

Advertisment

திருவள்ளூர் மாவட்டத்தில், ஹாக்கி வீரர் தயான் சந்தை நினைவுகூரும் வகையில் அவரது முகமூடி அணிந்துகொண்டு தொடர்ந்து 2,021 நிமிடங்கள் சிலம்பம் சுற்றி உலகசாதனை படைக்கும் முயற்சி நடைபெற்றது. இதே நிகழ்வில் 6 வயது சிறுவன் ஆர்வன் வெற்றி இலங்கோ, 72 ராகங்களை பாடியபடி இசை வாசித்து உலகசாதனை படைத்துள்ளார்.

6 year old boy made world record by singing 72 ragas ..!

சிறுவன் ஆர்வன், கீபோர்ட் இசை கருவியை வாசித்தப்படி 4 சரலி வரிசை, 9 ஜண்டி வரிசை, முழு நீள ஜண்டி மாலை மற்றும் 72 மேலகர்த்தா ராகங்களை வாசித்து அசத்தியுள்ளார். இவரது இந்த முயற்சி தற்போது உலகசாதனையாகியுள்ளது. உலக அளவில் இவர்தான் சிறு வயதில் (6), இசைக் கருவியை வாசித்தப்படி 72 ராகங்களைப் பாடியுள்ளார். இந்த உலகசாதனைக்கான நிகழ்ச்சியை ‘இந்தியன் யூத் ஸ்போர்ட்ஸ் அசோஷேன்’ மற்றும் ‘தமிழ்நாடு சிலம்பம் மார்ஷல் ஆர்ட்ஸ் அசோஷேன்’ இணைந்து நடத்தியது. சிறுவன் ஆர்வனுக்கு பல்வேறு தரப்புகளிலிருந்தும் பாராட்டுகள் குவிந்துவருகின்றன.