Published on 22/04/2022 | Edited on 22/04/2022

தமிழகத்தில் இனி ஆண்டிற்கு 6 கிராமசபை கூட்டங்கள் நடத்தப்படும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்தார்.
விதி எண் 110இன் கீழ் பேசிய முதல்வர் ஸ்டாலின் இந்த அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி, இனி தமிழகத்தில் கிராமசபை கூட்டங்கள் ஜனவரி 26, மே 1, ஆகஸ்ட் 15, அக்டோபர் 2, மார்ச் 22, நவம்பர் 1 ஆகிய தேதிகளில் நடத்தப்படும்.
முன்னதாக வருடத்திற்கு நான்கு நாட்கள் என ஜனவரி 26, மே 1, ஆகஸ்ட் 15, அக்டோபர் 2 ஆகிய தேதிகளில் கிராமசபை கூட்டம் நடந்துவந்தது குறிப்பிடத்தக்கது.