Advertisment

தமிழக மீனவர்கள் 6 பேர் கைது

6 Tamil Nadu fishermen arrested

Advertisment

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக அண்மையில் நாகை மீனவர்கள் இலங்கை கடற்படையால்கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது மேலும்ஆறு தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி-தலைமன்னார் இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் ஆறு பேரை இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக சிறை பிடித்ததோடு, அவர்களது விசைப்படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர். தலைமன்னார் கடற்படை முகாமிற்கு கைது செய்யப்பட்ட மீனவர்கள் கொண்டுசெல்லப்பட்டுள்ளனர். மாநில, மத்திய அரசுகள்உடனடியாக நடவடிக்கை எடுத்து மீனவர்களை மீட்டுத் தர வேண்டுமென மீனவர்களின் உறவினர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

fisherman Rameshwaram srilanka
இதையும் படியுங்கள்
Subscribe